facebook pixel
chevron_right Top
transparent
4½ ஆண்டு கால ஆட்சியில் 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடன் தள்ளுபடி
4½ ஆண்டு கால ஆட்சியில் குறிப்பிட்ட 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். சரமா, 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக நாளை(12-ந் தேதி) மற்றும் 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் கான்கெர் மாவட்டத்தில் உள்ள சரமா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:- கடந்த 4½ ஆண்டுகளில் மோடி ரூ.3½ லட்சம் கோடியை 15 பணக்காரர்களுக்கு கடனாக கொடுத்து உள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App