facebook pixel
chevron_right Top
transparent
குதூகலமான குழந்தைகள் மனம் குளிர்ந்த ஆசிரியர்கள்
சிவகாசிகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது மீண்டும் குழந்தைப் பருவத்திற்காக மட்டுமே. விளையாட்டாக இருந்தாலும், பல்வேறு போட்டிகளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. அவர்கள் பங்கேற்பதையே மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். எதைக்கற்றுக் கொடுத்தாலும் உடனடியாக அதை கற்றுக்கொள்வார்கள். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் சிறிது நேரம் குழந்தைகளோடு நேரம் செலவழித்தால் மொத்தக் கவலையும் பறந்து விடும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வியை மட்டுமே தொடர்ந்து கற்றுக் கொடுத்தால் , அவர்கள் விரக்தியடைந்து விடுவார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாடங்களைக் கற்றுத் தர வேண்டும். இதனால்தான் பெரும்பான்மையான பள்ளிகளில் குழந்தைகளுக்கு விளையாட்டோடு சேர்த்து பாடங்களை நடத்துகிறார்கள். குழந்தைகளுக்காக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவ. 5 ஐ குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App