facebook pixel
chevron_right Sports
transparent
இந்தியா- பாக்., பலப்பரீட்சை: பெண்கள் உலக கோப்பையில் 'விறுவிறு'
20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய வீராங்கனைகள் எளிதாக வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் தலா 5 ஆக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதுகின்றன. இன்று நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளபோதும், 'நம்பர்-2' அணி நியூசிலாந்தை சாய்த்தது. துவக்க வீராங்கனைகளான தானியா, மந்தனா முதல் போட்டியில் ஏமாற்றினர். இன்று இந்த தவறை திருத்திக்கொண்டால் நல்லது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App