facebook pixel
chevron_right Politics
transparent
தலைமை தேர்தல் அதிகாரியை மிசோரமில் மாற்ற ஒப்புதல்
புதுடில்லி:மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற, தேர்தல் கமிஷன் ஒப்புக் கொண்டுள்ளது.புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்க, மூன்று பேரை பரிந்துரைக்குமாறு, மாநில தலைமை செயலரிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் லால் தன்ஹவாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. ௪௦ உறுப்பினர்கள் பலம் உடைய மிசோரம் சட்டசபைக்கு, ௨௮ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நாளையுடன் முடிகிறது.மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர், எஸ்.பி. மாநில முதன்மை செயலராக இருந்த, சவுன்கோ, தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தலையிடுவதாக, தேர்தல் கமிஷனிடம், தலைமை தேர்தல் அதிகாரி ஷஷாங்க் குற்றம் சாட்டினார்.இதையடுத்து, சவுன்கோவை, பணியிலிருந்து விடுவித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App