facebook pixel
chevron_right Sports
transparent
ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி
பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டியில் தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி பெற்றுள்ளார். தரவரிசை ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டியில் தமிழகத்தின் பஹத் முகமது மற்றும் மகாராஷ்டிராவின் அதர்வா சர்மா விளையாடினர். இந்த போட்டியில் 22 வயது நிறைந்த முகமது 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 18 வயது நிறைந்த அதர்வாவை வீழ்த்தி பட்டத்தினை வென்றுள்ளார். சென்னையில் உள்ள டென்னிஸ் அகாடெமி ஒன்றில் பயிற்சி பெற்றவரான முகமது முதல் செட்டை 45 நிமிடங்களில் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டை 32 நிமிடங்களில் வென்று பட்டத்தினை தட்டி சென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற முகமது ரூ.26 ஆயிரம் பரிசு தொகை மற்றும் கோப்பையும், 2வது இடம் பிடித்த அதர்வா ரூ.18 ஆயிரம் பரிசு தொகையும் பெற்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App