facebook pixel
chevron_right Top
transparent
கந்தகார் விமானம் கடத்தப்பட்டதாக திடீரென அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு: டெல்லி விமான நிலையத்தில் களேபரம்
06:40 புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாருக்கு ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் விமானம் எப்ஜி 312 நேற்று மதியம் 3.30க்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் வந்த பின்னர் விமானத்தை பைலட் இயக்கத் தொடங்கினார்.அப்போது திடீரென பயணிகள் பகுதியில் இருந்த அபாய எச்சரிக்கை மணி இடைவிடாமல் ஒலித்தது. 'ஹைஜாக் பட்டன்' எனப்படும் அந்த எச்சரிக்கை மணி விமானம் கடத்தப்படுவதை பயணிகளுக்கு தெரிவிக்கும் மணியாகும். அந்த பட்டன் ஒலிப்பதைக் கண்ட பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். அடுத்த சில நொடிகளில் பயணிகளிடையே பீதி எழுந்தது. அதனால் விமானத்தினுள் கூச்சல், குழப்பம், பதட்டம் ஏற்பட்டது. செய்வதறியாமல் விமானப் பணிப்பெண்களும் திகைத்தனர். பைலட் அறையில் இருந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தானியங்கி கருவி தகவல் அனுப்பியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App