facebook pixel
chevron_right Business
transparent
31 வங்கி சாரா நிதி நிறுவனம் இயங்க ரிசர்வ் வங்கி தடை
33:34 மும்பை: நாடு முழுவதும் வர்த்தக விதிமுறைகளில் தவறுசெய்த 31 நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் இயங்க மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் அல்லாமல், பல்வேறு வங்கியல்லா நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வீட்டுக்கடன் உட்பட பல்வேறு கடன்களை தரும் இந்த நிதி நிறுவனங்கள் கடந்த காலங்களில் எந்த விதிமுறைகளுக்கும் உட்படாமல் இயங்கி வந்தன. கடும் விதிகள் அமல்படுத்தப்பட்டு, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இயங்குவது தொடர்பாக கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. சமீப காலமாக இந்த நிதி நிறுவனங்கள் மீது தொடரந்து ரிசர்வ் வங்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தி வந்தது. இந்த நிலையில் 31 நிதி நிறுவனங்கள் இயங்க தடை விதித்து, அவற்றின் பதிவு உரிமத்தை ரத்து செய்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App