facebook pixel
chevron_right Top
transparent
மோசடி பத்திரப்பதிவு புகார் மேல்முறையீட்டில் மாற்றம்
'மோசடி பத்திரப்பதிவு குறித்த மேல்முறையீடுகளை, அந்தந்த மண்டல, டி.ஐ.ஜி.,க்களே விசாரிக்கலாம்' என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக, பத்திரங்கள் பதிவானால், அது குறித்த புகார்களை விசாரிக்கும் நடைமுறையில் குழப்பம் நிலவியது. இதில், பதிவு அலுவலர் களை, வழக்கில் சேர்ப்பது தொடர்பாக, 2011ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 2017 நவ., 11ல், திரும்ப பெறப்பட்டது.இதில், 2011 முதல், 2017 நவ., வரை, மோசடி பத்திரப் பதிவுகள் தொடர்பான புகார்கள் குறித்து, மாவட்ட பதிவாளர்கள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதில், மேல்முறையீடு செய்வோர், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தை அணுக வேண்டும் என, ஜூலையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் வர துவங்கிஉள்ளன. இதில், மனுதாரர்கள், சென்னைக்கு வர வேண்டிய சூழல் எழுந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App