facebook pixel
chevron_right Top
transparent
ரேஷன் கடைகளில் விஜிலென்ஸ் குழு புதிதாக நியமிக்க வேண்டிய கட்டாயம்
ரேஷன் கடைகளில், விஜிலென்ஸ் குழுவின் கூட்டத்தை, முறையாக நடத்த, புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகள் உள்ளன. தலா, ஒரு கடையில், 1,000 - 1,200 கார்டுதாரர்களுக்கு, மானிய விலை உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில், 70 சதவீதம் பேர் மட்டும், அனைத்து பொருட்களையும் வாங்குகின்றனர். இதனால், கார்டு தாரர் வாங்காத பொருட்களை, ஊழியர்கள் முறைகேடாக விற்பனை செய்கின்றனர்.உணவு பாதுகாப்பு சட்டம், தமிழகத்தில், 2016 நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, அனைவருக்கும் உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, 2017ல், ஒவ்வொரு ரேஷன் கடையிலும், ஐந்து - ஏழு பேர் அடங்கிய, விஜிலென்ஸ் குழு அமைக்கப் பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App