facebook pixel
chevron_right Top
transparent
மின் வாரியத்தில், 'பயோமெட்ரிக்' பதிவு முதல்வர் மாவட்டத்தில் விரைவில் அமல்
ஊழியர்களின் வருகையை, 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை வாயிலாக பதிவு செய்யும் முறையை, சேலம் மாவட்டம், மேட்டூரில் அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மின் வாரியத்திற்கு, பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள், மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் வருகை பதிவை, பதிவேடுகளில் பதிவு செய்கின்றனர். தாமதம்பலரும், குறித்த நேரத்தில், அலுவலகம் வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த சிலர், தாமதமாக வருகின்றனர். அலுவலகம் வந்ததும், சொந்த வேலையை பார்க்க கிளம்புகின்றனர். இதனால், குறிப்பாக, மழை காலங்களில், மின் வினியோக பணிகளை மேற்கொள்வதில், ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App