facebook pixel
chevron_right Top
transparent
திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் பாஜ போராட்டம்
36:07 பெங்களூரு: கர்நாடக அரசின் சார்பில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பாஜவினர் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் இயங்கி வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நவம்பர் 10ம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. திப்பு ஜெயந்தி விழா அரசின் சார்பில் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவதாக பாஜ மட்டுமில்லாமல், சில இந்து அமைப்புகளும் அறிவித்தன. இதனால் மாநிலத்தில் பதட்டமான, மிகவும் பதட்டமான இடங்கள் என்று போலீசார் அடையாளம் கண்டு 144 தடை உத்தரவு பிறப்பித்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. ஆனால், தடையை மீறி மாநிலம் முழுவதும் நேற்று பாஜ சார்பில் போராட்டம் நடந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App