facebook pixel
chevron_right Top
transparent
பாக். அத்துமீறி தாக்குதல் இந்திய வீரர் பரிதாப பலி
39:56 ஜம்மு: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீரின் ரஜோவ்ரி மாவட்ட எல்லைப் பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் திடீரென அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. உடனடியாக இந்திய வீரர்களும் கடுமையான பதிலடி கொடுத்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் இந்தியா தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். இதேபோல், காஷ்மீரின் அக்னூர் பகுதியிலும் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ராணுவ சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூடுக்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App