facebook pixel
chevron_right Top
transparent
திருவனந்தபுரம் தீ விபத்தில் திடீர் திருப்பம் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஊழியர்கள் 2 பேர் கைது: சம்பளத்தை குறைத்த ஆத்திரத்தில் தீ வைத்ததாக வாக்குமூலம்
42:08 திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆலைக்கு தீ வைத்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் மண்விளையில் பிரபல பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் பொருட்கள் தயாரிக்கும் ெதாழிற்சாலை உள்ளது. கடந்த வாரம் இந்த தொழிற்சாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ₹500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தீவிர விசாரணையில் தீ 2 ஊழியர்கள்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆலையின் கண்காணிப்பு கேமரா காட்சியில் தீ விபத்திற்கு முன் 2 ஊழியரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு நின்றது தெரியவந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App