facebook pixel
chevron_right Top
transparent
15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை ரத்து செய்தார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
34:51 சரமா: "பிரதமர் மோடி தனக்கு வேண்டிய 15 தொழிலதிபர் நண்பர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்" என சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். சட்டீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சட்டீஸ்கரின் சராமா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் 15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த சலுகைகள் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும், பெண்களுக்கும், பழங்குடியினருக்கும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. மோடி 15 தொழிலதிபர்களை நம்புகிறார். நாங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களை நம்புகிறோம். சட்டீஸ்கரில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சிட்பண்ட் மோசடி நடந்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App