facebook pixel
chevron_right Top
transparent
கிருஷ்ணகிரி அருகே 10 மணி நேரமாக தவிப்பு கிணற்றுக்குள் விழுந்த ஆண் யானை போராடி மீட்பு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
19:56 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானையை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக் காட்டில் உள்ள யானைகள், அடிக்கடி ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட யானைகள் கடூர், தாண்டரகுண்டா வழியாக உப்புபள்ளம் பகுதிக்கு வந்து, பயிர்களை நாசம் செய்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், ராயக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App