facebook pixel
chevron_right Top
transparent
சேலத்தில் வேகமாக பரவுகிறது.. நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல்: மதுரை, சிவகங்கை, விருதுநகரில் 3 பேர் பலி
12:13 சேலம்: சேலத்தில் நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றார். மதுரை, சிவகங்கை, விருதுநகரில் 3 பேர் பலியாகினர். சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில், சிறப்பு வார்டில் பன்றிக்காய்ச்சல் பாதித்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் பாதித்த 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் சூரமங்கலத்தை சேரந்தவர் நடிகர் சரவணன் (50). இவர், பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக, கடந்த 6ம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் உறுதியானது. தீவிர சிகிச்சைக்குப்பின் அவர் நேற்று காலை சென்னை புறப்பட்டார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App