facebook pixel
chevron_right Top
transparent
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்பு'
சபரிமலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி, தேசவிரோத சக்திகள் ஊடுருவி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், இரண்டாவது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சித்திரை ஆட்டத்திருநாள் மற்றும் ஐப்பசி மாத பூஜையின் போது, சபரிமலையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில், சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், நேற்று அறிக்கை தாக்கல்செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: சபரிமலையில் தற்போதுள்ள சூழ்நிலை மோசமாகவும், அபாயகரமாகவும் உள்ளது. சித்திரை ஆட்டதிருநாள் பூஜைக்கு வந்த பெண்களை தடுத்தது தவறு. 18-ம் படியில் ஏறியதில் ஆசார மீறல் நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வருவர். தற்போதைய நிலை தொடர்ந்தால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App