facebook pixel
chevron_right Top
transparent
இலங்கை பார்லி., கலைப்பை எதிர்த்து வழக்கு
'இலங்கை பார்லிமென்டை, அதிபர் சிறிசேன கலைத்தது, சட்ட விரோதம்; இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்' என, முன்னாள் பிரதமர், ரணில் விக்ரமசிங்கேயின், ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் அரசியல் குழப்பம், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில், அமைச்சராக இருந்தவர் சிறிசேன. 2015ல் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு, சிறிசேன வெற்றி பெற்றார். பார்லிமென்டில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை. இதையடுத்து, சிறிசேனவின், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து, ஆட்சியமைத்தன.பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை, சிறிசேன நியமித்தார். ஆட்சி அமைந்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அதிபர் சிறிசேனவுக்கும், பிரதமர் விக்ரமசிங்கேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App