facebook pixel
chevron_right Top
transparent
கார்த்திகையை கலர்புல் ஆக்க அற்புதமாக தயாராகுது அகல் விளக்கு
06:49 மானாமதுரை: மானாமதுரையில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக இருந்தாலும் மண்பாண்ட தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 'மண் புகழ்' மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மண்பாண்ட தொழில் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசனுக்கு தகுந்தாற்போல, பொம்மைகள் முதல் பானைகள் வரை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகள், நவராத்திரிக்கு கொலுபொம்மைகள், கார்த்திகை திருவிழாற்காக அகல் விளக்குகள், பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் மண்சட்டி, கலயம், பானை, மரக்கன்று வளர்க்க பூந்தொட்டிகளும் தயார் செய்கின்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App