facebook pixel
chevron_right Top
transparent
கான்கிரீட் வீட்டையும் 'குடிசை' என்று கணக்கிடும் அதிகாரிகள் வெள்ளத்தில் வீடுகள் சேத இழப்பீடு தமிழகத்திற்கு 5 ஆயிரம், கேரளாவில் 4 லட்சம்: விதிமுறைகளை திருத்தி அமைக்க தமிழக அரசு முன்வருமா?
07:21 நாகர்கோவில்: மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்து விழுந்தால் குடிசை சேதம் என்று 5 ஆயிரம் மட்டும் இழப்பீடு வழங்குகின்ற விதிமுறையை தமிழக அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ளப்பெருக்கு காலங்களில் வீடுகள் சேதமடைவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஓகி புயல் காற்று புரட்டிப்போட்டது. இதில் மொத்தம் 7 ஆயிரத்து 330 வீடுகள் சேதமடைந்தன. அவ்வாறு வீடுகளை முழுமையாக இழந்து தவித்த மக்களுக்கு அரசால் 5 ஆயிரம் மட்டும் நிவாரணம் என்று வழங்கபட்டது. அதுவும் பகுதியளவு சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு 4100 மட்டுமே நிவாரணம் ஆகும். ஆனால் இவை குடிசை வீடு என்று பொதுவாக கணக்கிட்டு வழங்கப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App