facebook pixel
chevron_right Top
transparent
50 சதவீத ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை திணறும் கோவை தொழிற்கூடங்கள்
07:24 கோவை: 50 சதவீதம் ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை காரணமாக கோவை தொழிற்கூடங்கள் திணறுகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் பெருநகரமான கோவையில் 50 ஆயிரம் லேத் ஒர்க் ஷாப்கள், 5 ஆயிரம் சிஎன்சி மெஷின் ஒர்க் ஷாப்கள், 500 பவுண்டரி ஆலைகள், 800 பம்புசெட் நிறுவனங்கள், 600 ஆட்டோமொபைல் நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் ஆலைகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகை தொழில் நிறுவனங்கள் என தொழில்வளம் நிறைந்துள்ளது. தொழில்துறையின் முன்னணி மாவட்டமாக இருப்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் பஞ்சாலை, இன்ஜினீயரிங், லேத் ஒர்க் ஷாப்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுனங்களில் தொழிலாளர் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App