facebook pixel
chevron_right Top
transparent
தேவை அதிகரிக்கும் நிலையில் அழியும் அபாயம்: சந்தனமரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்குமா தமிழக வனத்துறை
09:23 சேலம்: மரத் தங்கம் எனப்படும் சந்தன மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தமிழக வனப்பகுதியில் காலம், காலமாக வளர்ந்து வருகிறது. மருந்தாகவும், நறுமணப் பொருளாகவும் பயன்படும் சந்தனத்தின் உலகத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை இந்தியாவே ஈடு செய்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் சந்தனம் விளைந்தாலும்,இது வறட்சியை தாங்கி விளையக் கூடிய மரம் என்பதால் இயல்பாகவே தென் பகுதிக்கு உட்பட்ட கர்நாடகம், தமிழகம், கேரள வனப்பகுதிகளில் அதிகளவில் வளர்கிறது. உலகில் ஆஸ்திரேலியா சந்தனம், இந்திய சந்தனம் என இரு வகைகள் இருந்தாலும், 8 சதவீதம் வரையிலும் எண்ணெய் தன்மை இருப்பதால் இந்திய சந்தன மரங்களுக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் விலை கிடைக்கிறது. 1980ம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் வனப்பகுதிகளிலும், தனியார் நிலங்களிலும் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App