facebook pixel
chevron_right Politics
transparent
சசிகலாவை சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் செல்லவில்லை டி.டி.வி.தினகரன் அணியில் மோதலா? உச்சக்கட்ட குழப்பத்தில் ஆதரவாளர்கள்
05:46 சென்னை: சசிகலாவை சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் பெங்களூரு செல்லாததால் டி.டி.வி.தினகரன் அணியில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உச்சக்கட்ட குழப்பம் அடைந்துள்ளனர். முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. முதலில் டி.டி.வி.தினகரன், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App