facebook pixel
chevron_right Top
transparent
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு : வங்கக்கடலில் உருவானது, 'கஜா' புயல்
வங்க கடலில், நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த மூன்று நாட்களில், 'கஜா' புயலாக உருவெடுக்கும் என்று, வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், வரும், 14ம் தேதியில் இருந்து, தமிழகத்தில் பருவ மழை தீவிரமடையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன், நேற்று அளித்த பேட்டி: வங்கக் கடலில், அந்தமான் பகுதியில் நிலவிய, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று வலுவடைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது, வடக்கு அந்தமான் பகுதியில், மையம் கொண்டுள்ளது. இது, அடுத்து வரும் நாட்களில், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, அடுத்த, 48 மணி நேரத்தில், புயலாக மாற வாய்ப்புள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App