facebook pixel
chevron_right Business
transparent
ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: ரகுராம் ராஜன்
"பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமல் ஆகிய நடவடிக்கைகளால், 2017ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது," என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.அவர், அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலையில் உரையாற்றியதாவது:. கடந்த, 2012 -- 16 வரை, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டது. ஆனால், சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சி பெறும்போது, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., என்ற இரண்டு நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களாக அமைந்து விட்டன.தற்போது, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி காணத் துவங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதை தடுக்கும் வகையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. எனினும், தற்போதைய, 7 சதவீத பொருளாதார வளர்ச்சி குறையும்பட்சத்தில், ஏதோ தவறு நடக்கிறது எனலாம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App