facebook pixel
chevron_right Entertainment
transparent
"சர்காருக்காக ஜெயலலிதா மேல பழி போடாதீங்க!"
ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் 'சர்கார்' திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. படத்தின் வசூலைத் தாண்டி படம் பேசியிருக்கும் அரசியல் இன்றைய அரசியல் தளத்தில் இருப்பவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றிருக்கும் வரலட்சுமியின் கேரக்டர் பெயர், அரசு கொடுத்த இலவச பொருள்களைத் தூக்கி எறியும் காட்சி. எனப் படம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 'சர்கார்' பிரச்னைகள் குறித்து இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமனிடம் பேசினேன். இந்தப் பிரச்னையை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகத்தான் பார்க்கிறேன். இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிறாங்கனு தெரியலை. 1971-ஆம் வருடம் கலைஞர் பெரும்பான்மை பெற்று முதலமைச்சர் ஆனார். அப்போது 'முகம்மது பின் துக்ளக்' என்ற அரசியல் திரைப்படம் வெளியானது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App