facebook pixel
chevron_right Entertainment
transparent
மீண்டும் இரட்டை வேடத்தில் சமந்தா
எழுத்தின் அளவு: ஹீரோக்களை போலவே ஹீரோயின்களுக்கும் இரட்டை வேடங்களில் நடிக்கவும், போலீஸ் கேரக்டரில் நடிக்கவும் ஆர்வம் உண்டு தான். அந்தவகையில் நடிகை சமந்தா, 'பத்து என்றதுக்குள்ள' படத்தில் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்ததுடன், வில்லியாகவும் நடித்திருந்தார். தற்போது மீண்டும் அவர் இன்னொரு படத்தில் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் 7௦ வயது கிழவியாகவும் 2௦ வயது இளைஞியாகவும் நடிக்கவுள்ளாராம் சமந்தா. மிஸ் கிரானி என்கிற கொரியன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App