facebook pixel
chevron_right Top
transparent
காஷ்மீரில் என்கவுண்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை; இணையதள சேவை முடக்கம்
தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் டிக்கென் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர், ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு அதிரடி படை மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கூட்டாக அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் தீவிரவாதிகள் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் வஜீத் உல் இஸ்லாம் மற்றும் லியாகத் வானி ஆகிய 2 ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App