facebook pixel
chevron_right Top
transparent
கலிபோர்னியாவை கலங்கடிக்கும் காட்டுத்தீ... 9 பேர் பலி, ஆபத்தில் ஆயிரக்கணக்கானோர்!
கலிபோர்னியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் அச்சுறுத்தும் தீப்பிழம்பில் மாட்டிக்கொண்டுள்ளன. சான்டா அனா சூறாவளிக் காற்றின் காரணமாக காட்டுப் பகுதியில் இருந்த சறுகுகள் உரசி தீப்பிடித்துள்ளது. கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் இந்த காட்டுத் தீக்கு இது வரை 9 பேர் பலியாகியுள்ளனர். மலைகளை இரையாக்கிக் கொண்ட காட்டுத் தீ குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவியதால் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு முயற்சிகளை எடுத்தும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய காட்டுத் தீயானது ஊஸ்லே தீ என்று அழைக்கப்படுகிறது. சுமார் 22 சதுர மைல்களுக்கு இந்த தீயானது பரவியுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App