facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: படத்தின் பெயர்தான் 'ஜீரோ'. ஆனால், வெளியீட்டிற்கு முன்பே கோடியில் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஷாரூக்கான் குள்ளமான மனிதராக நடிக்கும் 'ஜீரோ' படத்தின் டிரைலர் ஒரு வாரம் முன்பாக யு டியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகமான பார்வைகள், லைக்குகள் என சாதனைகளைப் படைத்தது. நான்கு நாட்களிலேயே 10 கோடி பார்வைகளைப் பெற்று 'ஜீரோ' டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இப்படத்தின் டிரைலர் அனைத்து இணைய சமூக வலைத்தளங்களிலும் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. யு டியூபில் மட்டும் தற்போது 8 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், பேஸ்புக்கில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும், யு டியூபில் இதுவரை 17 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App