facebook pixel
chevron_right Entertainment
transparent
தெலுங்கில் லாபத்தைக் கொடுத்த சர்கார்
எழுத்தின் அளவு: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'சர்கார்' படம் வெளியீட்டிற்கு முன்பாக கதை சர்ச்சையிலும், வெளியீட்டிற்குப் பின்பாக அரசியல் காட்சிகள் சர்ச்சையிலும் சிக்கியது. இந்தப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் டப்பிங் உரிமை விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்தத் தொகையை நான்கு நாட்களிலேயே பெற்று 'சர்கார்' ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக வெளியான தெலுங்கு படமான 'அதுகோ', ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாதது 'சர்கார்' படத்தின் வசூலுக்கு வசதியாகப் போய்விட்டது. இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகை அனைத்தும் 'சர்கார்' படத்தின் லாபக் கணக்கில் சேரும் என்கிறார்கள் டோலிவுட்டினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App