facebook pixel
chevron_right Top
transparent
கடலூர் மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை: கஞ்சா பொட்டலங்கள், சிம்கார்டுகள் பறிமுதல்
17:24 கடலூர்: கடலூர் மத்திய சிறையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போன் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அத்துடன் சில கைதிகள் தங்குத்தடையின்றி செல்போன் பயன்படுத்துவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் டிஐஜி ஜெயபாரதி தலைமையில் துணை கண்காணிப்பாளர் மற்றும் 5 ஆய்வாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிறை வளாகம், கைதிகளின் அறைகளில் தீவிர சோதனை நடத்தியபோது கைதிகள் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போன் சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App