facebook pixel
chevron_right Top
transparent
இந்தியன் ரயில்வே பாரம்பரிய பயணம் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவை.க்கு நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம்
00:59 ஸ்ரீவைகுண்டம் : இந்தியன் ரயில்வே பாரம்பரிய பயண திட்டத்தின் கீழ் இயக்கப்படும் நீராவி இன்ஜின் ரயில் சோதனை ஓட்டம், நேற்று திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே நடந்தது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்த இந்த வழித்தடம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்பாதையாக மாற்றப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பாசஞ்சர் ரயில்களும், சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரசும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு இந்த ரயில் வழித்தடம், அகலப்பாதையாக மாற்றப்பட்டது வரப்பிரசாதமாகும். அதேபோல் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் கோயில்கள், மணப்பாடு சர்ச்சுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பேருதவியாக உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App