facebook pixel
chevron_right Entertainment
transparent
சர்கார் படம் வெளியாகி 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
சர்கார் படம் வெளியாகி 4 நாட்களில் ரூ. 150 கோடி வசூலை தாண்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது இத்திரைப்படம். இதில், விஜயுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App