facebook pixel
chevron_right Entertainment
transparent
சிவகாமியாக நடிக்கிறார் மிருனால் தாக்கூர்
எழுத்தின் அளவு: உலகத்தை திரும்பி பார்க்க வைத்த இந்திய சினிமா பாகுபலி. இதன் இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பாகுபலி கேரக்டருக்கு இணையாக பேசப்பட்ட கதாபாத்திரம் சிவகாமி. மகிழ்மதி தேசத்தின் ராஜாமாதாவாகத்தான் சிவகாமி கேரக்டர் அறிமுகம் ஆகும். அவர் எப்படி ராஜாமாதா ஆனார். பாகுபலியை அவர் தத்தெடுத்து வளர்த்தது ஏன்? பாகுபலியின் உண்மையான அப்பா, அம்மா யார் என்பதை மையமாக வைத்து ஆனந்த நீலகண்டன் என்ற எழுத்தாளர் நாவலாக எழுதி உள்ளார். அந்த நாவலை மையமாக வைத்து சிவகாமியின் வாழ்க்கை நெட்பிளிக்சில் வெளியாக இருக்கிறது. சிவகாமியின் சிறுவயது முதல் அவர் ராஜமாதாவாகி நாட்டை சிறப்பாக ஆள்வது வரை கதை இருக்கும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App