facebook pixel
chevron_right Top
transparent
கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சல்: 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி
35:07 கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக காய்ச்சலுக்கு அதிகளவு மக்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். குறிப்பாக கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், பன்ருட்டி ஆகிய பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 2000க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக காத்திருக்க நேரிடுவதால், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையை அதிகளவு மக்கள் நாடுகின்றனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடலூர் அரசு மருத்துவமனையில், சுமார் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் 3 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App