facebook pixel
chevron_right Top
transparent
சிவன்மலை கோயிலுக்கு செல்ல பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அதிர்ச்சி
41:38 காங்கயம் : காங்கயம் அருகே சிவன்மலை உள்ளது. இந்த மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மலை மீதுள்ள இந்த கோயிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 496 படிகளும், வாகனங்கள் செல்ல தார் சாலை வசதியும் உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் படிகளில் ஏறி செல்வதை தவிர்த்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதையே விரும்புகின்றனர். இதுதவிர, கோயில் தேவஸ்தானம் சார்பில் 2 பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் திடீரென இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App