facebook pixel
chevron_right Top
transparent
அஞ்செட்டியில் குடிநீர் ஆதாரமான ஏரியில் கோழிக்கழிவுகளை வீசுவதால் சுகாதார சீர்கேடு
19:35 தேன்கனிக்கோட்டை : அஞ்செட்டியில், குடிநீர் ஆதாரமாக விளங்கும் நலன் சக்கரவர்த்தி ஏரியில் கோழி கழிவுகள் கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அஞ்செட்டியில் நலன் சக்கரவர்த்தி ஏரி உள்ளது. புதர் மண்டி மண்மேடாக உள்ள இந்த ஏரியை தனியார் தொழிற்சாலை மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஏரியின் ஒரு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அஞ்செட்டிக்கு குடிநீர் வினிநியோகம் செய்யப்படுகிறது. அதே வேளையில், ஏரியின் ஒரு பகுதியில் கோழி கடைகளில் மீதமாகும் கழிவுகளை கொண்டு வந்து குவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. கோழி கழிவுகளை கடித்து குதறியவாறு சாலைக்கு கொண்டு வரும் நாய்கள், அந்த வழியாக செல்லும் மாணவர்களை துரத்திச் சென்று பதம் பார்க்கின்றன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App