facebook pixel
chevron_right Top
transparent
ஐகோர்ட்டுகளில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகளா?
நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டுகளில் வெறும் 9% பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2017ம் ஆண்டில் இந்திய நீதித்துறையின் பொற்காலம் என போற்றும் வகையில் நாட்டின் முக்கிய 4 ஐகோர்ட்டுகளுக்கு பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். நீதிபதிகள் மஞ்சுளா செலூர் மும்பை ஐகோர்ட்டிற்கும், ஜி.ரோகினி டில்லி ஐகோர்ட்டிற்கும், நிஹிதா நிர்மலா மத்ரே கோல்கட்டா ஐகோர்ட்டிற்கும், இந்திரா பானர்ஜி சென்னை ஐகோர்ட்டிற்கும் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் 2017 ஏப்ரல் 13ம் தேதி நீதிபதி ரோகினியும், செப்டம்பர் 19ம் தேதி மத்ரேவும், டிசம்பர் 4ம் தேதி செலூரும் பணி ஓய்வுபெற்றனர். மேலும் இந்திரா பானர்ஜி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App