facebook pixel
chevron_right Top
transparent
சீனியப்பாதர்ஹாவில் கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
52:25 மண்டபம் : கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சீனியப்பாதர்ஹா மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே சாத்தக்கோன் வலசை ஊராட்சிக்கு உட்பட்டது சீனியப்பாதர்ஹா மீனவ கிராமம். இந்த கிராமம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளதால் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இங்கு அமைந்துள்ள சீனியப்பாதர்ஹா புகழ் பெற்று விளங்குவதால் தினமும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சீனியப்பாதர்ஹா கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கடல் அரிப்பு அதிகளவில் உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App