facebook pixel
chevron_right Top
transparent
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
34:15 * காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் நீண்ட நேரம் காத்திருப்பு. விருதுநகர் : விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவில், மருத்துவர் பற்றாக்குறையால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த கடந்த 5 ஆண்டுகளாக பணி நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் 450க்கும் அதிகமான உள்நோயாளிகளும், தினசரி 1,500க்கும் அதிகமான வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவி வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைவரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பீதியில் உள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App