facebook pixel
chevron_right Top
transparent
கம்பம் பகுதியில் முதல் போகம் அறுவடை பணி தீவிரம்
36:27 கம்பம் : கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் அதிகமான ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் நடக்கிறது. முல்லைபெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் பாசன தண்ணீர் மூலமாக இந்த வருடம் முதல்போகம் விளைந்துள்ள நிலையில், கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி தொடங்கி உள்ளது. இதற்காக அறுவடை எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு இரவு, பகலாக நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் நெல் அதிகளவில் மில்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. காரணம் தேனிமாவட்டத்தில் கம்பத்தில்தான் தற்போது அறுவடை தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மிக ஆர்வமாக வரத்தொடங்கி உள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App