facebook pixel
chevron_right Top
transparent
கர்நாடகா: திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம்
கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திப்பு சுல்தான், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதனால் திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்தக்கூடாது என்றும் பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த விழா அழைப்பிதழில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை அச்சிடக்கூடாது என்று அக்கட்சி மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே திப்பு ஜெயந்தி விழா இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நடக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App