facebook pixel
chevron_right Top
transparent
நவ.12 முதல் டிச.7 வரை தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை!
வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பினை கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் வெளியிட்டார். இத்தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்க நாட்டின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12-ம் தேதியும், 20-ம் தேதியும் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 28-ம் தேதி வாக்குப் பதிவும், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதி வாக்குப் பதிவும் நடைபெற உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App