facebook pixel
chevron_right Sports
transparent
ஹர்மன்பிரீத் கவுர் சாதனை சதம்: நியூசி.,யை வென்றது இந்தியா
20' உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் கடந்து சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீசில், பெண்களுக்கான 6வது ஐ.சி.சி., 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, கயானாவில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு தானியா பாட்யா (9), ஸ்மிருதி மந்தனா (2) ஏமாற்றினர். அறிமுக தமிழக வீராங்கனை ஹேமலதா (15) நிலைக்கவில்லை. இந்திய அணி 40 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App