facebook pixel
chevron_right Sports
transparent
கேரளா அணிக்கு சச்சின் 'குட்- பை'
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சக உரிமையாளர் பொறுப்பிலிருந்து சச்சின் விலகினார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 2014ல் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து உள்ளூர் தொடர் துவங்கப்பட்டது. இதில் கோல்கட்டா, கேரளா போன்ற அணிகள் பங்கேற்று வருகின்றன. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வென்றது இல்லை. இரண்டு 'சீசனில்' பைனல் வரை முன்னேறி இருந்தது. இதன் சக உரிமையாளராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இருந்தார். போட்டியை நேரடியாக கண்டு ஆதரவை வழங்கி வந்தார். தற்போது சக உரிமையாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். கேரள அணியின் 80 சதவீத பங்குகளை வைத்துள்ள நடிகர் சிரஞ்சீவி, அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் சச்சினின் 20 சதவீத பங்கை வாங்கியுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App