facebook pixel
chevron_right Sports
transparent
மிதாலி ராஜ் சதம் வீண்: இந்திய பெண்கள் தோல்வி
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மிதாலி ராஜ் சதம் வீணானது. ஐ.சி.சி., பெண்கள் சாம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்திருந்தது. மூன்றாவது போட்டி கடுனாயகே நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. மிதாலி அபாரம்: இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மந்தனா(51) அரைசதம் கடந்தார். ஹர்மன்பிரீத் கவுர் (17), தயாலன் ஹேமலதா (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய மிதாலி ராஜ் சதம் கடந்தார். தீப்தி சர்மா (38) ஓரளவு கைகொடுத்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App