facebook pixel
chevron_right Sports
transparent
பாகிஸ்தானிடம் சிக்கிய ஹாங்காங்: 116 ரன்களுக்கு சுருண்டது
ஆசிய கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் பவுலர்கள் அசத்த ஹாங்காங் அணி 116 ரன்களுக்கு சுருண்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஹாங்காங் அணி கேப்டன் ஆன்சுமான் ராத் பேட்டிங் தேர்வு செய்தார். எதிர்பார்த்ததுபோலவே, பாகிஸ்தான் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஹாங்காங் அணிக்கு நிஷாகத் கான், ஆன்சுமான் ராத் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஷாதப்பின் துல்லிய 'த்ரோவில்' நிஷாகத் (13) ரன் அவுட்டானார். பகீம் 'வேகத்தில்' ஆன்சுமான் (19) ஆட்டமிழந்தார். கார்டர் (2) ஒற்றை இலக்கில் திரும்பினார். ஷாதப் ஜாலம்: தன் பங்கிற்கு நெருக்கடி தந்தார் சுழற்பந்துவீச்சாளர் ஷாதப் கான்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App