facebook pixel
chevron_right Top
transparent
PSLV C-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
25:45 ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV C-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இங்கிலாந்தின் 2-வது செயற்கைக்கோளையும் சேர்த்து வணிக நோக்கில் இதனை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இங்கிலாந்தின் நிலப்பரப்பு, பேரிடர் கண்காணிப்பு ஆகியவற்றிற்காக இந்த செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது. PSLV C-42 செயற்கைகோள் கப்பல், கடல்வழி போக்குவரத்தையும் கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நோவாசர் 445 கிலோவும், எஸ் 1-4 444 கிலோ எடையும் கொண்டவை. PSLV C-42 இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44-வது ராக்கெட் இதுவாகும். 44.4 மீட்டர் உயரம் கொண்ட PSLV C-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது. இவ்விரு செயற்கைக்கோளையும் சுமந்தபடி செல்லும் இந்தியாவின் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட வட்டப்பாதையில் வெற்றிகரமாக செல்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App