facebook pixel
chevron_right Politics
transparent
``தி.மு.க கூட்டணியை உடைக்கவில்லை... கட்சியை வளர்க்கிறேன்..." -தஞ்சாவூரில் திருநாவுக்கரசர் பேச்சு
தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரபேல் விமான ஊழல் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வை கடுமையாக விமர்சித்தார். தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலில் கண்டன பேரணி என அறிவித்து விளம்பரங்கள் செய்யபட்டது. ஆனால் முக்கிய தலைவர்கள் வர தாமதமானதால் ஆர்ப்பாட்டத்தோடு மட்டும் முடித்து கொண்டனர். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக், பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App